பேச்சிப்பாறை ஊராட்சியில் ரூ. 3 கோடியில் சாலை மேம்பாடு
பேச்சிப்பாறை ஊராட்சியில் ரூ. 3 கோடி மதிப்பில் சாலைகளை சீரமைக்க


பேச்சிப்பாறை ஊராட்சியில் ரூ. 3 கோடி மதிப்பில் சாலைகளை சீரமைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை ஊராட்சியில் கிராம சபை கூட்டம், பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவர் எஸ். ராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.பேச்சிப்பாறை ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.3 கோடியே 4 லட்சம் சிறப்பு நிதி மூலம் சாலை வசதியில்லாத கிராமங்களில் சாலைவசதி செய்யவும், ரூ. 1.42 லட்சத்தில் பழங்குடி குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் சூரிய மின் விளக்குகள் அமைக்கவும், 2006 வன உரிமை பாதுகாப்புச் சட்டப்படி பழங்குடி கிராமங்கள் வரைமுறைக்குள்பட்டு தனித்தனி கிராம சபைகளாக இயங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...